Bharat Devotion
Embroidered artwork for திருப்பாவை: Embroidered Om symbol above a brass diya, marigolds and a temple spire at sunrise

திருப்பாவை

ஸ்தோத்திரங்கள்விசிஷ்டாத்வைதம் (ஸ்ரீ வைஷ்ணவம்)கிருஷ்ணர்விஷ்ணு

திருப்பாவை

திருப்பாவை என்பது ஆண்டாள் என்னும் பெண் ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பு. மார்கழி மாதத்தில் பெண்கள் நோன்பு நோற்று, அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணபிரானைப் பாடிப் போற்றும் வழக்கத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன.

செய்யுள்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்கல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
maarghaḻidh dhinghaḷ madhiniṟaindha naṉṉaaḷaal neeraadhabh bhodhuveer bhodhumiṉo neriḻaiyeer jheerghalghum aaybhbhaadhijh jhèlvajh jhiṟumeerghaaḷ ghoorvel ghòdhundhòḻilaṉ nandhaghobhaṉ ghumaraṉ eraarndha ghanni yajhodhai iḷañjhiṅgha ghaarmeṉi jhènghan ghadhirmadhiyam bholmughadhdhaaṉ naaraayanaṉe namaghghe bhaṟaidharuvaaṉ bhaaror bhughaḻabh bhadhindhelor èmbhaavaay. | 1 |

பாடல் 1

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்; செய்யாதனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
vaiyadhhdhu vaaḻveerghaaḷ! naamumnam bhaavaighujh jhèyyum ghirisaighaḷ gheeḷeero! bhaaṟghadhaluḷ bhaiyath dhuyiṉṟa bharamaṉ adhibhaadi nèyyunnom; bhaluṉṉom; naadkhaale neeraadi maiyyidhdhèḻudhom; malaridhdhu naammudiyom; jhèyyaadhanajeyyom; dheekhuraḷaich jhèṉṟodhom; aiyamum bichhaiyum aandhaṉaiyum kaikkaaddi uyyumaaṟènnhi ughandhelor èmbhaavaay! | 2 |

பாடல் 2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
onghi ulaghaḷandha udhdhamaṉ bherbhaadhi naanghaḷnam bhaavaigghujh jhaaṟṟi neeraadhiṉaal dheenghiṉṟi naadhèllaam dhinghaḷmum maaribhèydhu onghu bhèṟum jhènnèl oodhu ghayalughaḷabh bhoonghuvaḷaibh bhodhil bhòṟivandhu ghanbhadhubhbhadh dhenghaadhe bhughghirundhu jheerdhdha mulaibhaṟṟi vaanga, ghudam niṟaighghum vaḷḷal bherumbhajhughghaḷ neenghaadha jhèlvam niṟaindhelor èmbhaavaay. | 3 |

பாடல் 3

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகத்தினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
aaḻi maḻaigh ghannaa! òṉṟu nee ghaigharavel aaḻiyuḷ bhughghu mughandhughòdu aarththu eṟi ooḻi mudhalvaṉ uruvambhol mèyghaṟudhdhubh bhaaḻiyan dhoḷudhaibh bhaṟbhanaabhaṉ ghaiyil aaḻibhol miṉṉi valambhuribhol niṉṟu adhirndhu dhaaḻaadhe jhaarngham udhaidhdha jharamaḻaibhol vaaḻa ulaghadhdhiṉil bhèydhidhaay, naanghaḷum maarghaḻi neeraadha maghiḻndhelor èmbhaavaay. | 4 |

பாடல் 4

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
mAyanai mannu vada madhurai maindhanai thUya peru nIr yamunai thuRaivanai Ayar kulaththinil thOnrum aNi viLakkai thAyaik kudal viLakkam seidha dhAmOdharanai thUyOmAi vandhu nAm thU malar thUvith thozhudhu vAyinAl pAdi manaththinAl sindhikka pOya pizhaiyum pugu tharuvAn ninRanavum thIyinil thUsAgum seppElOrempAvAi

பாடல் 5

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
puLLum silambina kAN puLLaraiyan kOyilil veLLai viLisanginp pEraravam kEttilaiyO piLLAi ezhundhirAi pEimulai nanjuNdu kaLLach chakatam kalakkazhiya kAlOchchi veLLaththaravil thuyil amarndha viththinai uLLaththuk koNdu munivargaLum yOgigaLum meLLa ezhundhu ari enRa pEraravam uLLam pugundhu kuLirndhElOrempAvAi | 6 |

பாடல் 6

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.
kIchu kIchenRu engum AnaichchAththan kalandhu pEsina pEchcharavam kEttilaiyO pEippEnnE! kAsum piRappum kalakalappa kai pErththu vAsa naRum kuzhal Aichchiyar maththinAl Osai padhuththa thayir aravam kEttilaiyO nAyagap pEN piLLAi nArAyaNan mUrthi kEsavanaip pAdavum nI kEttE kidaththiyO thEsam udaiyAy thiRavElorempAvAi | 7 |

பாடல் 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
kIzhvAnam veLLenRu erumai siRuvIdu mEivAn paranthana kAN mikkuLLa piLLaigaLum pOvAn pOginRArai pOgAmal kAththu unnai kUvuvAn vandhu ninROm kOdhukalam udaiya pAvai ezhundhirAi pAdip paRai koNdu mAvAi piLandhAnai mallarai mAttiya dhEvAdhi dhEvanai chenRu nAm sEviththAl AvAvenRu ArAindhu aruLElorempAvAi | 8 |

பாடல் 8

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
thUmaNi mAdaththu chuRRum viLakku eriya dhUbham kamazhath thuyil aNai mEl kaN vaLarum mAmAn magaLE maNik kadhavam thAL thiRavAi mAmIr avaLai ezhuppIrO un magaL thAn UmaiyO anRich chevidO ananthalO Emap perum thuyil mandhirap pattALO mAmAyan mAdhavan vaikunthan enRenRu nAmam palavum navinRElOrempAvAi | 9 |

பாடல் 9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
noṟṟujh jhuvarghgham bhughughiṉṟa ammaṉaay! maaṟṟamum dhaaraaro vaajhal dhiṟavaadhaar naaṟṟadh dhuḻaaymudhi naaraayanaṉ nammaal bhoṟṟabh bhaṟaidharum bhunniyaṉaal bhandhu òrunaaḷ ghooṟṟadhdhiṉ vaayveeḻndha ghumbhagharunaṉum dhoṟṟum uṉaghghe bhèrundhuyil dhandhaaṉo? aaṟṟa aṉandhal udhaiyaay! arunghalame! dheṟṟamaay vandhu dhiṟavelor èmbhaavaay. | 10 |

பாடல் 10

கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்றுசெருச் செய்யும் குற்றொன் றில்லாத கோவலர் தம்பொற்கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழியர் எல்லாரும் வந்து நின் முற்றத்தில் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச் சிற்றாதே பேசாதே செல்வப்பெங் காட்டிநீ எற்றுக்குத் துயில்கிறாய் ஏலோர் எம்பாவாய்.
ghaṟṟughghaṟavaigh ghananghaḷ bhalaghaṟandhu jhèṟṟaar dhiṟalaḻiyajh jhèṉṟujhèrujh jhèyyum ghuṟṟòṉ ṟillaadha ghovalar dhambhòṟghòdhiye! bhuṟṟaravalghul bhuṉamayile! bhodharaay jhuṟṟadhdhudh dhoḻiyar èllaarum vandhu niṉ muṟṟadhdhil bhughundhu mughilvannaṉ bherbhaadhajh jhiṟṟaadhe bhejhaadhe jhèlvabhbhèn ghaadhdhinee èṟṟughghudh dhuyilghiṟaay elor èmbhaavaay. | 11 |

பாடல் 11

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
kanaiththu iLam kaRRu erumai kanRukku irangi ninaiththu mulai vazhiyE ninRu pAl sOra nanaiththu illam sERAakkum naRchelvan thangAi paniththalai vIzha nin vAsal kadai paRRi sinaththinAl then ilangaik kOmAnaich cheRRa manaththukku iniyAnai pAdavum nI vAi thiRavAi iniththAn ezhundhirAi Idhenna pEr uRakkam anaiththu illaththArum aRindhElOrempAvAi

பாடல் 12

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
puLLin vAi kINdAnai pollA arakkanai kiLLik kaLaindhAnai kIrthimai pAdippOi piLLaigaL ellArum pAvaikkaLam pukkAr veLLi ezhundhu vyAzham uRangiRRu puLLum silambina kAN pOdharik kaNNinAi kuLLak kuLiRa kudaindhu nIrAdAdhE paLLik kidaththiyO pAvAi nI nannALAl kaLLam thavirndhu kalandhElOrempAvAi | 13 |

பாடல் 13

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
unghaḷ bhuḻaghghadhaidh dhodhdhadhdhu vaaviyuḷ jhènghaḻuneer vaaynèghiḻndhu aambhalvaay ghoombhiṉaghaaṇ jhènghaṟ bhòdhigghoorai vènbhal dhavadhdhavar dhanghaḷ dhirughghoyil janghidhuvaaṉ boghinṟaar ènghaḷai muṉṉam èḻubhbhuvaaṉ vaaybhejhum nanghaay èḻundhiraay naanaadhaay naavudhaiyaay janghodhu jhaghgharam endhum dhadhaghghaiyaṉ banghayagh ghannaaṉaibh bhaadhelorempaavaay. | 14 |

பாடல் 14

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
ellE iLam kiLiyE! innam uRangudhiyO? chil enRu azhaiyEnmin nangaimIr pOdharginREn vallai un katturaigaL paNdE un vAi aRidhum valleergaL nIngaLE nAnE thAn Ayiduga ollai nI pOdhAi unakkEnna vERudaiyai ellArum pOndharO pOndhAr pOndhu eNNikkoL val Anai konRAnai mARRArai mARRazhikka vallAnai mAyanaip pAda ElOrempAvAi

பாடல் 15

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப்பாடுவ வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
nAyaganAi ninRa nandhagOpanudaiya kOyil kAppAnE kodith thOnRum thOraNa vAyil kAppAnE maNikkadhavam thAL thiRavAi Ayar siRumiyarOmukku aRai paRai mAyan maNivaNNan nennalE vAi nErndhAn thUyOmAi vandhOm thuyil ezhappAduva vAyAl munnam munnam maRRAdhE ammA nI nEya nilaikkadhavam nIkkElOrempAvAi | 16 |

பாடல் 16

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம் பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
ambaramE thaNNIrE sORE aRam seyyum emperumAn nandhagOpAlA ezhundhirAi kombanArkkellAm kozhundhE kula viLakkE emperumAtti yasOdhAi aRivuRAi ambaramUdu aRuththu Ongi ulagaLandha umbar kOmAnE uRangAdhu ezhundhirAi sempoR kazhaladich chelvA baladhEvA umbiyum nIyum uRangElOrempAvAi | 17 |

பாடல் 17

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர்பாடச் செந்தாமரைக்கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
undhu madhakaLiRRan OdAdha thOL valiyan nandhagOpAlan marumagaLE nappinnAi gandham kamazhum kuzhalee kadai thiRavAi vandhengum kOzhi azhaiththana kAN mAdhavip pandhal mEl palkAl kuyil inangaL kUvina kAN pandhAr virali un maiththunan pEr pAdach chenthAmaraik kaiyAl sIrAr vaLai olippa vandhu thiRavAi magizhndhElOrempAvAi | 18 |

பாடல் 18

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
kuththu viLakkeriya kOttukkAl kattil mEl meththenRa pancha sayanaththin mElERi kOththalar pUnkuzhal nappinnai kongai mEl vaiththuk kidandha malar mArbhA vAi thiRavAi maiththadam kaNNinAi nI un maNALanai eththanai pOdhum thuyil ezha ottAi kAN eththanaiyElum piRivARRagillAyAl thaththuvam anRu thagavu ElOrempAvAi

பாடல் 19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
muppaththu mUvar amararkku mun chenRu kappam thavirkkum kaliyE thuyil ezhAi seppam udaiyAy thiRal udaiyAy cheRRArkku veppam kodukkum vimalA thuyil ezhAi seppenna men mulaich chevvAich chiRu marungul nappinnai nangAy thiruvE thuyil ezhAi ukkamum thattOLiyum thandhu un maNALanai ippOdhE emmai nIrAttu ElOrempAvAi

பாடல் 20

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
eRRa kalangaL edhir pongi mIdhaLippa mARRAdhE pAl soriyum vaLLal perum pasukkaL ARRap padaiththAn maganE aRivurAi URRam udaiyAy periyAy ulaginil thORRamAi ninRa sudarE thuyil ezhAi maRRAr unakku vali tholaindhu un vAsaRkaN ARRAdhu vandhu un adi paNiyumApOle pORRi yAm vandhOm pugazhndhu ElOrempAvAi

பாடல் 21

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
angaNmA gyAlaththu arasar abhimAna bhangamAi vandhu nin paLLikkattil kIzhE sangam iruppAr pOl vandhu thalaippeidhOm kingiNi vAich cheidha thAmaraippUp pOlE sengaN siRuchiRidhE emmEl vizhiyAvO thingaLum Adhiththiyanum ezhundhAr pOl angaN iraNdum kOndu engaL mEl nOkkudhiyEl engaL mEl sAbham izhindhu ElOrempAvAi

பாடல் 22

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
mAri malai muzhainjil mannik kidandhu uRangum sIriya singam aRivuRRuth thI vizhiththu vEri mayir ponga eppAdum pErndhu udhari mUri nimirndhu muzhangip puRappattup pOdharuma pOlE nI pUvaippU vaNNA un kOyil ninRu inganE pOndhu aruLik kOppudaiya sIriya singasanaththu irundhu yAm vandha kAriyam ArAyndhu aruL ElOrempAvAi

பாடல் 23

அன்று இவ்உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில் ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
anRu ivvulagam aLandhAi adi pORRi senRanguth then ilangai cheRRAi thiRal pORRi ponRach chakatam udhaiththAi pugazh pORRi kanRu kuNilAi eRindhAi kazhal pORRi kunRu kudaiyAi eduththAi guNam pORRi venRu pagai kedukkum nin kaiyil vEl pORRi enRenRun sEvagamE Eththip paRai koLvAn inRu yAm vandhOm iRangu ElOrempAvAi

பாடல் 24

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
oruththi maganAip piRandhu Or iravil oruththi maganAi oLiththu vaLarath tharikkilAn Agith thAn thIngu ninaindha karuththaip pizhaippiththuk kanjan vayiRRil neruppenna ninRa nedumAlE unnai aruththiththu vandhOm paRai tharudhiyAgil thiruththakka selvamum sEvagamum yAm pAdi varuththamum thIrndhu magizhndhu ElOrempAvAi

பாடல் 25

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல் வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
mAlE maNivaNNA mArgazhi nIrAduvAn mElaiyAr seivanagaL vENduvana kEttiyEl gyAlaththai ellAm nadunga muralvana pAlanna vaNNaththu un pAncha channiyamE pOlvana sangangaL pOippAdu udaiyanavE sAlap perum paRaiyE pallANdu isaippArE kOla viLakkE kodiyE vidhAnamE Alin ilaiyAy aruL ElOrempAvAi

பாடல் 26

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
kUdArai vellum sIrk gOvindhA unRannaip pAdip paRai koNdu yAm peRu sammAnam nAdu pugazhum parisinAl nanRAga sUdagamE thOL vaLaiyE thOdE sevippUvE pAdagamE enRanaiya palkalanum yAm aNivOm Adai uduppOm adhan pinnE pAl sORu mUda nei peidhu muzhankai vazhi vAra kUdi irundhu kuLirndhu ElOrempAvAi

பாடல் 27

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
kaRavaigaL pin chenRu kAnam sErndhu uNbOm aRivu onRum illAdha Aikkulaththu unRannaip piRavi peRunthanaip puNNiyam yAm udaiyOm kuRaivonRum illAdha gOvindhA unRannOdu uRavEl namakku ingu ozhikka ozhiyAdhu aRiyAdha piLLaigaLOm anbinAl unRannaich chiRu pEr azhaiththanavum sIRi aruLAdhE iRaivA nI thArAi paRai ElOrempAvAi

பாடல் 28

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
chiRRam chiRukAlE vandhu unnaich chEviththu un poRRAmarai adiyE pORRum poruL kELAi peRRam mEiththu uNNum kulaththil piRandhu nI kuRREval engaLaik koLLAmal pOgAdhu iRRaip paRai koLvAn anRu kAN gOvindhA eRRaikkum EzhEzh piRavikkum unRannOdu uRROmE AvOm unakkE nAm At cheivOm maRRai nam kAmangaL mARRu ElOrempAvAi

பாடல் 29

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
vangak kadal kadaindha mAdhavanaik kEsavanai thingaL thiru mugaththuch chEi izhaiyAr senRu iRainji angu ap paRai koNda ARRai aNi pudhuvaip paingamalath thaN theriyal pattar pirAn kOdhai sonna sangath thamizh mAlai muppadhum thappAmE ingu ipparisu uraippAr Ir iraNdu mAl varaith thOL sengaN thiru mugaththuch chelvath thiru mAlAl engum thiruvaruL peRRu inbuRuvar empAvAi

பாடல் 30

Worship Guidelines & Chanting Benefits (Phalashruti)

Auspicious Day

புதன்கிழமை, வியாழக்கிழமை & ஏகாதசி

Best Time (Muhurta)

பிரம்ம முகூர்த்தம் அல்லது அந்திப் பொழுது

Sacred Offerings

துளசி இலை, வெண்ணெய், கல்கண்டு மற்றும் மஞ்சள் மலர்கள்

Spiritual Benefits (Phalashruti)
  • தெய்வீக பக்தி, மன மகிழ்ச்சி மற்றும் கவலைகள் நீங்குதல்

பின்னணி

இப்பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் அடங்கும். வைணவ சமயத்தில் மார்கழி மாதம் முழுவதும் இப்பாவை பாடப்படுகிறது. கோயில்களிலும் இல்லங்களிலும் இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டாளின் பக்தி மற்றும் கண்ணனின் மீதான காதலை இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

கதையும் முக்கியத்துவமும்

ஆண்டாளின் முப்பது தமிழ்ப் பாசுரங்கள் ஒவ்வொரு மார்கழி விடியலிலும் பாடப்பட்டு, தோழியரை ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி விழிப்பூட்டுகின்றன. மரபு அவரை எட்டாம் நூற்றாண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் வைக்கிறது.

முழு கதையையும் படிக்க →

இந்த பாடல் பற்றி

இயற்றியவர்: Andal

உங்களுக்குத் தெரியுமா?

ஆசிரியர்

ஆண்டாள் (கோதை) எனும் ஒரே பெண் ஆழ்வார் இயற்றியது. இவர் தமிழ் வைணவத்தின் முதன்மையான பக்தி இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 30 பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடியின் கீழ் கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு.

பாடலின் பின்னணி

மார்கழி மாதத்தில் (டிசம்பர்-ஜனவரி) பெண்கள் நீராடி நோன்பு இருந்து கண்ணனை மணக்க விரும்பும் விரதத்தை இது விளக்குகிறது. ஆயர்குலப் பெண்கள் ஒருவரையொருவர் எழுப்பி, கண்ணனின் புகழைப் பாடி, அவனிடம் பறை (விரதப் பலன்) கேட்பதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.

அமைப்பு

ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'எம்பாவாய்' என்ற சொல் வரும். இது விரதத்தின் போது பாடப்படும் ஒரு வகைப் பாடல் வடிவம். மொத்தம் 30 பாடல்கள், ஒவ்வொன்றும் கண்ணனின் பல்வேறு திருநாமங்களையும் செயல்களையும் புகழ்கின்றன.

முக்கியத்துவம்

திருப்பாவை தமிழ் வைணவத்தில் மிக முக்கியமான பக்தி நூலாகும். மார்கழி மாதம் முழுவதும் வைணவ இல்லங்களிலும் கோயில்களிலும் இது பாடப்படுகிறது. இது பக்தி, சரணாகதி, மற்றும் இறைவனுடன் ஒன்றிணையும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சிறப்பு அம்சம்

இப்பாடல்களில் கண்ணன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறான்: நாராயணன், மாயன், மணிவண்ணன், கோவிந்தன், உலகளந்த உத்தமன் போன்று. மேலும், ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாக கற்பனை செய்து பாடியுள்ளார்.

Krishna முழுமையான ஸ்தோத்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகள்

Krishna

Krishna அனைத்தையும் காண்க →

இந்து மதம் இலிருந்து மேலும்

அனைத்தையும் காண்க

தொடர்புடைய போதனைகள்

ஒரே போதனை, மரபுகள் முழுவதும் எதிரொலிக்கிறது